Wednesday, February 5, 2025

வரத்து அதிகரிப்பால் அதிரடியாக குறைந்த காய்கறிகளின் விலை

சென்னை கோயம்பேடு சந்தையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வரத்து அதிகரிப்பால் தக்காளி, பூண்டு, வெங்காயத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

பூண்டின் விலை ரூ.50 குறைந்து ரூ. 350க்கு விற்பனை ஆகிறது. கடந்த வாரத்தில் வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரையும், தக்காளி ரூ.30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று வெங்காயம் கிலோ ரூ.50க்கும், தக்காளி ரூ.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Latest news