Thursday, April 3, 2025

காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கூடுதல் வரத்து மற்றும் சீரான காலநிலை காரணமாக கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. வழக்கத்தை விட 200 லாரிகளில் கூடுதலாக காய்கறிகள் வந்துள்ளன. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் 50 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி, தற்போது 15 ரூபாயாக குறைந்துள்ளது.

வெங்காயம், கத்தரிக்காய், வெண்டைக்காய், பீன்ஸ், உருளைக்கிழங்கு, தேங்காய் விலையும் குறைந்துள்ளது. 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ இஞ்சி 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் அமைந்துள்ள நகர்ப்புற உழவர் சந்தை, உள்பட பல இடங்களிலும் காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் வியாபாரம் சூடுபிடிக்கவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Latest news