செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 1) திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெறுவதால் இன்று பள்ளிகள் செயல்படாது.
முதலில், வடகிழக்கு பருவமழையால் 22-வது தேதி பள்ளிகள் வழக்கம் போல இயங்கவில்லை. அதற்காக, இன்று (சனிக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்தனர்.
ஆனால், தற்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிறப்பித்த உத்தரவின்படி, அந்த வேலை நாளுக்கான அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.
