தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன் படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,400-க்கும், ஒரு கிராம் ரூ.8,050-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108-க்கு விற்பனையாகிறது.