மீண்டும் அதிரடி உயர்வு : ஒரே நாளில் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை

சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,200-க்கும் சவரனுக்கு ரூ.2,400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,21,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 15,550 க்கும் சவரனுக்கு ரூ. 2,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,24, 400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.320 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ரூ.3,20,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News