Wednesday, February 5, 2025

சற்று ஆறுதலை தந்த தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின்படி தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து, 7 ஆயிரத்து 435 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 59 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Latest news