சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இது நகைப் பிரியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.63,840-க்கும், கிராம் ரூ.7,980-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமுமின்றி கிராம் ரூ.107-க்கு விற்கப்படுகிறது.