Saturday, March 15, 2025

நேற்று அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது

நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.65,760-க்கும், தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.8,220-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.112-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Latest news