ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக இருக்கிறது. அந்த வகையில் நேற்று காலை மற்றும் பிற்பகல் 2 வேளைகளில் விலை உயர்ந்து இருந்தது.
அதாவது,காலையில் கிராமுக்கு ரூ.135-ம், சவரனுக்கு ரூ.1,080-ம், பிற்பகலில் கிராமுக்கு ரூ.115-ம், சவரனுக்கு ரூ.920-ம் உயர்ந்து, நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.250-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 325-க்கும், ஒரு சவரன் ரூ.90.600-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1.65.000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
