புத்தாண்டு முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று சென்னையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு, 80 ரூபாய் அதிகரித்து 7260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.