தங்கம் விலை இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த 23-ந் தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தாண்டி இதுவரை இல்லாத அளவிற்க்கு அதிரடியாக விலை உயர்ந்தது.
இந்நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,700-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்து உள்ளது. இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 160 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.