தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
அதன் படி , நேற்றைய நிலவரப்படி , தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,840க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,720க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து, வாரத்தின் கடைசி நாள் மற்றும் மாதத்தின் கடைசி நாளான இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து. ஒரு கிராம் மட்டுமே ரூ.12.000 திற்கு தொடவுள்ளது.
அதாவது, கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,980க்கும் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.95,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.192க்கும், ஒரு கிலோ ரூ.1,92,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
