ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக இருக்கிறது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11.520-க்கும், ஒரு சவரன் ரூ.92.160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம், கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்தது.
அதன் படி, ஒரு கிராம் ரூ.11.720-க்கும், ஒரு சவரன் ரூ.93.760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக தங்கம் மீண்டும் ரூ.93 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,400 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 176 ரூபாய்க்கும் கிலோவுக்கு 2000 உயர்ந்து பார் வெள்ளி 1.76.000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
