ரூ.75 ஆயிரத்தை நெருங்கும் தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களுடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,305க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் தங்கம் 74,440 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,355க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 74,840 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ. 130க்கும். ஒரு கிலோ வெள்ளி 1,30,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related News

Latest News