ஆபரண தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் உச்சத்தில் இருந்த நிலையில், 2வது நாளாக குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்திருந்த நிலையில், இன்று 360 ரூபாய் குறைந்துள்ளது.
அதன்படி கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 210 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 73 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை 74 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளதால் நகைபிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 128 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.