தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியான விலை என்ற போக்கில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் காலை, மாலை என இருவேளையில் தங்கம் விலை உயர்ந்து, சவரன் ரூ.85,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,600-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.84,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்து இருக்கிறது. கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,510-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.84,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 150 ரூபாய்க்கும், பார் வெள்ளி 1,50,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
.