தங்கத்தின் விலை தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. தங்கத்திற்கு அடுத்தபடியாக வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி இமாலய உச்சத்தை அடைந்துள்ளது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,770-க்கும் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,2,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800-க்கும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,2,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 244 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
