சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது.கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் எட்டாக்கனியாக மாறிய விட்டது.
அதாவது, நேற்று நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11.500-க்கும், ஒரு சவரன் ரூ.92.000 விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதாவது, கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக வெள்ளி விலை சரிந்து வருகிறது. அதாவது, இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 171 ரூபாய்க்கும் கிலோவுக்கு 3,000 ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1,071,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
