தங்கம் விலை முதன்முறையாக 75 ஆயிரம் ரூபாயை தாண்டி, 125 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை கடந்த 7 நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த 17ம் தேதி முதல் இன்று வரை 2 ஆயிரத்து 200 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 380 ரூபாய்க்கும், சவரனுக்கு 760 ரூபாய் அதிகரித்து, 75 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
125 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டுள்ளது. தங்கத்துடன் போட்டி போட்டு வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து, 129 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.