கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில்,கடந்த வாரம் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.82,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000-க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,500-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையியல்
தற்போது தங்கம் விலை சரவனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.85,120-க்கும்,கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.10,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 150 ரூபாய்க்கும், கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து பார் வெள்ளி 1,50,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு நாட்களில் 4 வது முறையாக தங்கம் உயர்ந்து உள்ளது. யாரும் எதிர்பாராத விதமாகவே பார்க்கப்படுகிறது.
