இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,215-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து சவரன் ரூ.73,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9.315-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 74,520-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 130 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 30ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.