தங்கம் விலை அதிரடியாக உயர்வு : இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை நேற்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,180 ரூபாய்க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,285 ரூபாய்க்கும் சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 74,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 128 ரூபாய்க்கும் கிலோவுக்கு 2000 ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News