கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில், கடந்த வாரம் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.82,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,360-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை திங்கட்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் ₹3 அதிகரித்து ₹148 ஆகவும், ஒரு கிலோ ₹1,48,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
