மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் தங்கம் விலை ரூ.70 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்தது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.220 உயர்ந்து ரூ.8,930க்கு விற்கப்படுகிறது.