Thursday, December 25, 2025

TODAY GOLD RATE : (21-11-2025) நகை பிரியர்களுக்கு இதுதான் சரியான நேரம்!!

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக இருக்கிறது. கடந்த 14-ந்தேதியில் இருந்து விலை குறைந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் விலை அதிகரித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று விலை குறைந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11.600-க்கும், ஒரு சவரன் ரூ.92.800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,460-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.91,680 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 169 ரூபாய்க்கும் கிலோவுக்கு 4000 குறைந்து பார் வெள்ளி 1.69.000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

.

Related News

Latest News