நகைப்பிரியர்களுக்கு ஷாக்.., மீண்டும் உயர்ந்த தங்கம் விலை

நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 குறைந்து ஒரு கிராம் ரூ.9,200 க்கும் சவரனுக்கு ரூ.840 குறைந்து ஒரு சவரன் ரூ.73,600 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,000 க்கும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,250 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.122 க்கும் கிலோவுக்கு ரூ.2000 உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,22,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News