ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக இருக்கிறது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.
அதாவது, கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,400-க்கும், சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.91,200 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியும் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 170 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
