இன்று காலை தங்கத்தின் விலை கிராமுக்கு 250 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,950-க்கும் சவரனுக்கு 2000 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.95,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
