ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்திருந்த நிலையில், நேற்று ஒரு லட்சத்தை தாண்டியது.
தங்கத்துடன் போட்டி, போட்டு வெள்ளியும் புதிய உச்சத்தை தொட்டிருந்தது. இந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று குறைந்து, நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து 12 ஆயிரத்து 350 ரூபாய்க்கும், சவரனுக்கு ஆயிரத்து 320 ரூபாய் குறைந்து 98 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து 211 ரூபாய்க்கும், கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
