ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக இருக்கிறது. நேற்று ஒரே நாளில் காலையும் மாலையும் என 2 வேலையும் விலை ஏறியது. இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 180 குறைந்து ரூ.11,740- க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.93,920 க்கும் விற்பனையாகிறது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 190 ரூபாய் குறைந்து ரூ.11,550-க்கும், சவரனுக்கு 1,520 ரூபாய் குறைந்து ரூ.92,400 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்டுகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 175 ரூபாய்க்கும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து பார் வெள்ளி 1,75,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
