TODAY GOLD RATE : (14-11-2025) தங்கத்தின் விலை இன்றைய நிலவரம்..

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக இருக்கிறது.

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் காலையும் மாலையும் என 2 வேலையும் விலை ஏறியது.

அதாவது, காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,800 ஆகவும், பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.94,400 ஆகவும் விற்பனையானது.

ஆனால், காலை உயர்வுக்குப் பிறகு, மதியம் மீண்டும் தங்க விலை பவுனுக்கு ரூ.800 கூடுதல் உயர்வை எட்டியது. இதன் விளைவாக, இன்று ஒரே நாளில் மொத்தம் பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.11,900 க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.95,200 க்கும் விற்பனையாகிறது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது.

அதன் படி, கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,840-க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து, சவரன் ரூ.94,720 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யயப்படுகிறது.

வெள்ளி விலையும் குறைந்து இருக்கிறது. கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 180 ரூபாய்க்கும் கிலோவுக்கு 3000 குறைந்து பார் வெள்ளி 1.80.000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News