தங்கம் விலை இன்று 3-வது நாளாக சரிவை சந்தித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,18,080-க்கும், கிராமுக்கு ரூ.140 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.
