தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பழையபடி விலை ‘கிடுகிடு’வென உயர ஆரம்பித்தது.
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் இம்மாத தொடக்கத்தில் ரூ.96 ஆயிரத்தையும் தாண்டியது. இதனின் தொடர்ச்சியாக ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் விற்பனை ஆனது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது.
நேற்று காலை தங்கத்தின் விலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம், பிற்பகல் நிலவரப்படி மேலும் கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் என மொத்தம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.320-ம், சவரனுக்கு ரூ.2,560-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12.370-க்கும், ஒரு சவரன் ரூ.98.960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையே தொடர்ந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சம் என்ற இமாலய உச்சத்தையும் எட்டிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை என்கின்றனர் வல்லுநர்கள்.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. ஒரு சவரன் ரூ.98.960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12.370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.210-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2.10.000 ஆக விற்பனையாகிறது.
