TODAY GOLD RATE : (13-10-2025) அதிரடி சரவெடியாக ஏறும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!!

சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது.கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் எட்டாக்கனியாக மாறிய விட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,525 ரூபாய்க்கும் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,200-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் தற்போது ஒரே நாளில் 2வது முறையாக அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. அதன் படி,சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது, அதாவது, சவரன் ஆபரணத்தங்கம் ரூ.92,640க்கும், கிராமுக்கு ரூ.11,580 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உச்சம் அடைந்து வருகிறது. அதாவது , இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.197-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News