TODAY GOLD RATE : (11-10-2025) அதிரடி சரவெடி தான்… ஒரே நாளில் 2 வது முறையாக தங்கத்தின் விலை உயர்வு!!

சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது.கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் எட்டாக்கனியாக மாறிய விட்டது.

அதிலும் கடந்த சில தினங்களாகவே காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இதன் மூலம், தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது.

கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. இந்த நிலையில்,தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது, இன்று காலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கும், சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன் படி, ஒரு கிராம் தங்கம் விலை ரூ.75 அதிகரித்து, கிராம் ரூ.11,500க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே நாளில் 2 வைத்து முறை விலை உயர்ந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இன்று காலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்த நிலையில் தற்போது மேலும், ரூ.600 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News