சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது.கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் எட்டாக்கனியாக மாறிய விட்டது.
இந்த நிலையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.91.200-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.11,400-க்கு விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 11,260 ரூபாய்க்கும், சவரனுக்கு 1.320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.90,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. அதன் படி, இன்று கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 180 ரூபாய்க்கும் கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து பார் வெள்ளி 1,80,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.