தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை உயர்ந்தது. இது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480 க்கும் கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,560 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.