ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக இருக்கிறது. அந்த வகையில், நேற்று, கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,400-க்கும், சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.91,200 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியும் விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.173-க்கும், கிலோவுக்கு 3000 உயர்ந்து பார் வெள்ளி 1.73.000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
