ஆபரண தங்கத்தின் விலை இவ்வாரத்தில், அதாவது கடந்த 5 நாட்களில் மட்டும் ஆயிரத்து 400 ரூபாய் உயர்ந்திருந்தது. இந்த நிலையில், நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதல் வகையில் இன்று குறைந்துள்ளது.
அதன்படி, கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 9 ஆயிர்த்து 445 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 75 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 127 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.