Wednesday, October 8, 2025

TODAY GOLD RATE : (08-10-2025) தங்க விலையில் புதிய உச்சம்!! ரூ.90.000-த்தை கடந்தது..

சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது.கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் எட்டாக்கனியாக மாறிய இருக்கிறது.

அதாவது,நேற்று முன்தினம் ரூ.89.000-க்கு விற்பனை ஆனது. இதனைத் தொடர்ந்து ஒரு சவரன் தங்கம் நேற்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.11.125-ல் இருந்து ரூ.75 உயர்ந்து கிராம் ரூ.11. 200-க்கு விற்பனை செய்யப்பட்டது

இந்த நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ.90.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.167-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1.67.000-க்குவிற்பனை செய்யப்படுகிறது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News