TODAY GOLD RATE : (07-11-2025) இன்றைய தங்க விலை நிலவரம்!!

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக இருக்கிறது. இந்த நிலையில், தங்கம் கடந்த வாரத்தை ஒப்பிடும் போது, அதன் முந்தைய வாரத்தை விட சற்றே விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது

இந்த நிலையில், நேற்று தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று உயர்ந்தது. அதாவது, தங்கத்தின் விலை ஒரே நாளில் 2 வது முறையாக விலை உயர்ந்துள்ளது. அதன் படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.90,560க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ரூ.11,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது அனைத்து தரப்பு மக்களில் மனத்தில் அதிர்வு அலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,270-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.90,160 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 165 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1.65.000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News