சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது.கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் எட்டாக்கனியாக மாறிய இருக்கிறது.
கடந்த 4-ந் தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 950-க்கும், ஒரு சவரன் ரூ.87 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று காலையில் அதிரடியாக ரூ.110 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 60-க்கும், ரூ.880 அதிகரித்து சவரன் ரூ.88 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும், மாலையில் ரூ.65 அதிகரித்து கிராம் ரூ.11,125-க்கும், ரூ.520 அதிகரித்து சவரன் ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்ந்து முதல் முறையாக ஒரு கிராம் தங்கம் ரூ.11,000 கடந்து சவரன் ரூ.89 ஆயிரத்தை தொட்டது, இது வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியிருப்பது கடுமையான அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து ரூ.89,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.167-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1.67,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.