ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் விலை 75 ஆயிரம் ரூபாயை தாண்டியது.
தங்கம் விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் சவரனுக்கு 40 ரூபாயும், நேற்று 600 ரூபாயும் உயர்ந்த நிலையில், இன்று 80 ரூபாய் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் 9 ஆயிரத்து 380 ரூபாய்க்கும், சவரன் 75 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 10 ஆயிரத்து 233 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 126 ரூபாய்க்கும், கிலோ ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.