TODAY GOLD RATE : (06-11-2025) ஒரே நாளில் 2 வது முறையாக விலை உயர்ந்த தங்கம்!!

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக இருக்கிறது. இந்த நிலையில், தங்கம் கடந்த வாரத்தை ஒப்பிடும் போது, அதன் முந்தைய வாரத்தை விட சற்றே விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,250-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 2 வது முறையாக விலை உயர்ந்துள்ளது. அதன் படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.90,560க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ரூ.11,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. காலையில், ஒரு கிராம் வெள்ளி 164 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, வெள்ளியின் விலை மாலையில் கிராமுக்கு மேலும் ஒரு ரூபாய் உயர்ந்த நிலையில் ரூ.165க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News