ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக இருக்கிறது. இந்த நிலையில், தங்கம் கடந்த வாரத்தை ஒப்பிடும் போது, அதன் முந்தைய வாரத்தை விட சற்றே விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 3-ந்தேதி முதல் விலை உயர்ந்து வந்த நிலையில், நேற்று குறைந்து இருந்தது. ஒரு கிராம் ரூ.11.350-க்கும், ஒரு சவரன் ரூ.90.000-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலையில் குறைந்து காணப்பட்டது. அதாவது, ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்தது. கிராம் தங்கம் ரூ11.180-க்கும், சவரன் ரூ.89.440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று உயர்ந்துள்ளது.
அதாவது, கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,250-க்கும், சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியும் விலை உயர்ந்துள்ளது. அதாவது, கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 164 ரூபாய்க்கும் கிலோவுக்கு 1000 ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1.64.000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
