தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.12,760-க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ.1,02,080-க்கு விற்பனையானது.
நேற்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி,. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12,830க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.580 உயர்ந்து ரூ.1,02,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே, வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.271க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்த நிலையில் ரூ,2,71,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
