ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக இருக்கிறது. இந்த நிலையில், தங்கம் கடந்த வாரத்தை ஒப்பிடும் போது, அதன் முந்தைய வாரத்தை விட சற்றே விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 1-ந்தேதி முதல் விலை உயர்ந்து வந்த நிலையில், நேற்று குறைந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11.350-க்கும், ஒரு சவரன் ரூ.90.800-க்கும் விற்பனை செய்யப்பட்டது .
இதை தொடர்ந்து நேற்று, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்தது. அதாவது ஒரு கிராம் ரூ.11.250-க்கும், ஒரு சவரன் ரூ.90.000-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன் படி, கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து, ரூ.11,180-க்கும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ரூ.89.440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வெள்ளியும் விலை குறைந்துள்ளது. அதாவது கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 163 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2.000 ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ. 1.63.000-க்கும் விற்பனையாகிறது.
