தங்கத்தின் விலை நேற்று முன்தினம், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,800 க்கும் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,600 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, இன்று தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.12,680-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,01, 440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 8 உயர்ந்து ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.8,000 உயர்ந்து, ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
