காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என இருவேளையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்ததால் அனைத்து தரப்பு மக்களையும் அதிர வைத்தது.
இதனிடையே, தங்கம் கடந்த வாரத்தை ஒப்பிடும்போது அதன் முந்தைய வாரத்தை விட சற்றே விலை குறைந்து ஆறுதல் தந்தது.
இந்த நிலையில், இந்த வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,350-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த சூழலில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதாவது, கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,250-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
