சற்று குறைந்த தங்கத்தின் விலை : இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,105 க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840 க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.9,050 க்கும் சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.72,400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News